வியாழன், 8 நவம்பர், 2012

ஓசை வடிவம் மட்டும்தான் பாதுகாக்கப்பட்டதா?

ன்று குர்ஆனில் எழுத்துப் பிழை என்று வாதிடும் சகோ.பி.ஜே அவர்கள் குர்ஆனை அல்லாஹ் ஓசை வடிவில்தான் பாதுகாத்தான் என்று கூறி அதன் எழுத்து வடிவத்தைக் கொச்சைப் படுத்தியும் அதில் பிழை உள்ளது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்தே குர்ஆனை எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட அதன் கண்ணியத்தின் மீது ஏற்படுத்தும் ஒரு களங்கமாகும்.


குர்ஆனின் எழுத்துக் கலையும் அறியாமை வாதங்களும். தொடர் - 2

வல்ல அல்லாஹ் தான் இறக்கியருளிய வேதத்திலேயே – “எழுதுகோல் மீதும் (அதனால்) அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக” (68:1) என்றும் அவனே எழுது கோலைக்  கொண்டு கற்றுக் கொடுத்தான்” (96:4) என்றும் எழுதுவதன் மகத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகின்றான்.  இவ்வாறிருக்க அவனது அற்புத வேதமாகிய குர்ஆனின் எழுத்து வடிவ தொகுப்பு என்பது இறை ஏற்பாடல்ல என்பது அறியாமை வாதமன்றோ!

எழுதுவதன் மகத்துவத்தையும் அவசியத்தையும் வலியுறுத்தும் இறைவன், தான் அருளிய வேதத்தை எழுத்து வடிவிலும் பாதுகாப்பதற்கு அற்புதமான ஏற்பாட்டைச் செய்திருந்தான் என்பதே நமது சிந்தனைக்கு எட்டிய உண்மையாகும். 

குர்ஆன் எழுதப்பட்டதும் இறை ஏற்பாடுதான்!
பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அது அருளப்பட்ட நாளிலிருந்து  இன்று வரை குர்ஆன் விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த பேணுதலைக் கையாண்டு வருகிறது. குர்ஆனைப் போன்ற பிரதிகளை அச்சிட்டு முஸ்லிம்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தத் துணிந்த குழப்பவாதிகளின் தந்திரங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி தனித்து விளங்கும் அற்புத இறைநூலாக குர்ஆன் இருந்து கொண்டிருக்கிறது.
 
நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் ஏட்டளவில் பாதுகாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை அடுத்த தொடரில் காண்போம் இன்ஷா அல்லாஹ். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.